Group I II IV மனித உரிமைகள் ஆணையம் 6 & 12 New & Old book தொகுப்பு



மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Old book

* சமூகத்தில் மனிதன் சுமூக வாழத்தேவையான நிலையை உரிமை என்கிறோம்.

* பேரறிஞர் பொசாங்கோ கூற்றின்படி உரிமைகள் என்பவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால்
நடைமுறைப்படுத்தப்படுவதாகும்

* இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் நாள் ஐ.நா தினமாக கொண்டாடப்படுகிறது.

* ஐ.நா சபை 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. ஐ.நா. சபையின் ஆலோசனையின் பேரில்,
மனித உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மனித உரிமைகள் மசோதாவை தயாரித்து வழங்கியது, இம்மசோதா,
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதுவே அனைத்துலக
மனித உரிமைகள் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இது 30 சரத்துகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது

* அனைத்துலக மனித உரிமைக பிரகடனம் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாகும். 1966 ம் ஆண்டு ஐ.நா சபை மனித
உரிமைகளைப் பாதுகாக்க இரு ஒப்பந்தங்களை உருவாக்கியது.

* 1993 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற் மனித உரிமைகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட, தனது பிரகடனத்தில்
வியன்னா பிரகடனத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் மேன்மையடையச் செய்வதும் பன்னாட்டு சமூகத்தின்
சட்டப்பூர்வமான நோக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறியது. இதன்படி இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தை
1993 ஆம் ஆண்டு உருவாக்கியது. மாநிலங்களிலும் மனித உரிமையை பாதுகாக்க ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

* தேசிய மனித உரிமை ஆணையம்: 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தேசிய மனித உரிமைகள்
ஆணையம் இந்தியாவில் 1993 அக்டோபர் 12 ல் டெல்லியில் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாணையம் ஒரு தலைவரையும் நான்கு
உறுப்பினர்களையும் கொண்டது. (1 + 4)

* இவ்வாணையத்தின் தலைவர் பொதுவாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.

* ஆணையத்தின் ஓர் உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் மாநில
உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும் மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந் செயல்
அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்.

* தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லி. குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும்
உறுப்பினர்கள் அவரின் ஆலோசனைப்பேரில் பதவிநீக்கம் செய்யலாம்.

* இந்த அமைப்பின் தலைவரின் பதவிக்காலம்: ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது. மற்ற உறுப்பினர்களின் தவிக்காலம்
5 ஆண்டுகள் ஆகும்.

* குடியரசுத் தலைவர் விரும்பினால் இவர்களை மறுநியமன்ம் செய்யலாம்.

* தேசிய மனித உரிமை ஆணையம் வாழ்வியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாராங்களையம் பெற்றுள்ளது. அரசிற்கு
ஆண்டு தோறும் தனது அறிக்கையை அளிக்கிறது.

* மாநில மனித உரிமைகள் ஆணையம்: தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் மாநில் மனித உரிமைகள்
ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு சென்னையில் செயல்படுகிறது. இவ்வாணையத்தின் தலைவர் பொதுவாக
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.

* ஆணையத்தின் ஓர் உறுப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் ஓய்வு பெற்ற
மாவட்ட நீதிபதியாகவும் மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந் செயல் அனுபவமிக்கவராக இருக்க
வேண்டும். இவர்களை ஆளுநர் நியமனம் செய்வார். இந்த அமைப்பின் உறுப்பினர்களை  தேர்வு செய்யும் குழுவில்
முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோர் இருப்பர்

* ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயலர் செயல்படுகிறார். இந்திய அரசியலமைப்பில் பகுதி 1 மற்றும்
பகுதி 3 இல் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறப்படும்போது இவ்வாணையம் விசாரணைசெய்து
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கிறது

* மாநில மனித உரிமைய ஆணையத்தின் உறுப்பினர்கள் 70 து வரை அல்லது 5 ஆண்டுகள் பணியாற்றலாம்.
மாவட்ட மனித உரிமைகள் ஆணையம்: மனித உரிமைகளைக் காக்க மாவட்ட அளவில் நீதிமன்றங்களை மாநில
அரசாங்கம் உருவாக்கி உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை இந்நீதிமன்றம்
விசாரணை செய்யும். இந்நீமன்றத்தில் நீதிபதியாக ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் அல்லது அரசு
வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். இந்நீதிமன்றங்கள் விரைவாக மனித உரிமைகள் மீறல்களை விசாரனை செய்து,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்கிறது.

* 1856 ஆம் ஆண்டு இந்து விதவை மறுமணச்சட்டம்

* 1955 ஆம் ஆண்டு இந்து திருமண்ச் சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 21 ஆக நிர்ணயம் செய்துள்ளது

* 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்தின்படி தாய் தந்தையரின் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட்டது

* 1967 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்துத் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சுயமரியாதை திருமணங்களை
சட்டபூர்வமாக திருமணங்களாக அங்கிகரித்துள்ளது

* 1997 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்கள ைகேலிசெய்வதைத் தடுக்கச் சட்டம் இயற்றியுள்ளது. மேலும் 1999 ஆம்
ஆண்டு தமிழக அரசு பெண்களை இழிவுபடுத்தும் சுவரொட்டிகள் வெளியிடுவதைத் தடைசெய்துள்ளது

* பணிபுரியும் பெண்களின் நலனைக் காக்க மத்திய அரசம் மாநில அரசம் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது

* 1948 ஆம் ஆண்டு தொழிற்கூட சட்டம்,

* 1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம்

* 1952 ஆம் ஆண்டு சுரங்கச் சட்டம், ஆகியவை ஆண், பெண் வேறுபாடின்றி சமஊதியம் வழங்க வழிவகை செய்தது.

* 1961 ஆம் ஆண்டு பெண்களின் உடல் நலம் காக்க பேறுகாலப்பயன் சட்டம் இயற்றப்பட்டு மகப்பேறு காலத்தில்
பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது

* மார்ச் 08 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

* பெண்கள உரிமையை உறுதி செய்ய 1995 ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள உலகப் பெண்கள் ஒன்று
கூடி பெண்கள் உரிமைகள், மனித உரிமைகளே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகளே ” என முழக்கமிட்டனர்

* ஐ.நா சபை 1978 ஆம் ஆண்டைச் சர்வதேசப் பெண்கள் ஆண்டாக அறிவித்தது

* பெண்கள் நலன்காக்க இந்தியப் பெண்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் ஆகியவை
போராடி வருகின்றனர். இவை தவிர அரசுசாரா தன்னார்வ அமைப்புகளான அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், இன்னர்வீல்
சங்கம் போன்றவை உள்ளன

* குழந்தைகளின் நலன் காக்க இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட சட்டங்களை இயற்றியுள்ளது.

* பிரிவு 39 (கு) இன் படி இந்திய அரசியலமைப்பு, குழந்தைகள் சுதந்திரமாகவும் உடல் ஆரோக்கியத்துனும் வாழ வகை
செய்கிறது,

* பிரிவு 45 இன் படி அரசாங்கம் எல்லாக் குழந்தைகளுக்கும் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி வழங்கிட
வழிவகை செய்துள்ளது

* பிரிவு 24 இன்படி குழந்தைத் தொழிலாளர் முறை தடை செய்யப்பட்டுள்ளது

* சிறுவர்களுக்கு எதிரான அநீதிச் சட்டம் 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு இளம்சிறார்கள் முறையாக பாதுகாக்கப்படவும்
அவர்கள் திருந்தி வாழவும் வழி செய்துள்ளது

܀ ஐ.நா சபை 1979 ஆம் ஆண்டை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவித்துள்ளது.

* இந்தியா உலகிலேயே அதிகமான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது நாடாகும். மூன்றுமில்லியன் கி.மீ.
நீளமுள்ள சாலையில் 60 சதவிகிதம் தார்ச்சாலைகளாக உள்ளன

* சாலைப் போக்குவரத்து உதவிக்கு தொலைபேசியின் மூலம் 103 ஐத் தொடர்பு கொள்ளலாம்.

* 1989 ஆம் ஆண்டு ஜீலை 01 ஆம் தேதி, இந்தியாவில் கொண்டுவரப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டம் வாகன
ஓட்டுநர்களுக்கு ஓர் அடிப்படை வழிகாட்டியாக அமைந்துள்ளது.

* ஆண்டுதோறும் ஜனவரி முதல் மாதம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* சாலைப்பாதுகாப்புக்குழு 1986 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது


மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் New book


மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி
அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.
எழுதப்பட்ட மனித உரிமை ஆவணங்களின் முன்னோடி

*மகாசாசனம் 1215, இங்கிலாந்து-மக்களுக்கு புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரை சட்டத்திற்கு உட்படுத்தியது.

*மனித உரிமை மனு 1628, இங்கிலாந்து-மக்கள் உரிமைகளின் தொகுப்பு ஹேபியஸ் கார்பஸ் சட்டம், 1679, இங்கிலாந்து --மக்களின்
சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சட்டம்.

*ஆங்கில உரிமைகள் மசோதா, 1889 சில அடிப்படை சமூக/ குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்

* மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்ஸ்சின் அறிவிப்பு 1789 – சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம்
என்று கூறும் பிரான்சின் ஆவணம்.

* அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791 மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

*ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்
1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் ஐக்கிய நாடுகள் சபை,
மனித உரிமைகளுக்கான உலகளாவிள அறிவிப்பு-ஐக்கியநாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுன் ஒன்று மனித
உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும். இந்த இலக்குகளை அடைவதற்கான ஐக்கிய நாடுகள் சபை மனித
உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது.

*எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி ரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால்
வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

* இறுதியாக உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையால் 1948 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள்
வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

*பிரான்ஸ்நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
(பொதுச்சபை தீர்மானம் 217 ஆ). இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள்
தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950 ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின்
நவீன சர்வதேச மகாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

*ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை
உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையையே சாரும். மனித உரிமைகள் பிரகடத்தில் 30
சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரிமைகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளாக விரிவாக வகைப்படத்தப்பட்டுள்ளன.

*தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் நிறுவப்பட்டது.
இது சுதந்திரமான, சட்டப்பூர்வமான, அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும்.

*இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் என்பது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும்.
தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (அ) 70 வயது
வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்.

*தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. சட்டப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும்
திட்டப் பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியனவாகும்

*தலைவர்
(ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி)
ஓர் உறுப்பினர் ஓர் உறுப்பினர் இரண்டு நேரிணை
(உச்ச நீதிமன்ற (உயர் நீதிமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள்
நீதிபதி) நீதிபதி) (மனித உரிமைகள் (பின்வரும் தேசிய
தொடர்பான அறிவு, ஆணையங்களின்
அனுபவம் தலைவர்கள்)
பெற்றவர்கள்)
சிறுபான்மையிருக்கான பழங்குடியினருக்கான
தேசிய ஆணையம் தேசிய ஆணையம்
பட்டியல் சமூகத்திற்கான பெண்களுக்கான
தேசிய ஆணையம் தேசிய ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

* தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
இது மாநில அளவில் செயல்படுகிறது. இது ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது.

 * இந்தியா ஏழாவதுஅட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றில் கீழுள்ள
துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கும் (NHRC
ஏற்கனவே விசாரிக்கும் வழக்குகளைத் தவிர)
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள்

*பிரிவு 24-குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது.

*பிரிவு 39 (எப்- ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகைக்செய்கிறது.

*பிரிவு 45-6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரச
முயல்கிறது.

குழந்தைக்கான உரிமைகள்
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு 1 இன்படி 18
வயதுக்குட்பட்ட அனைவரும்குழந்தை எனப்படுவர். குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989 ஆம்
ஆண்டு நவம்பர் 20 இல் வெளியிடப்பட்டது.

1978- சர்வதேச பெண்கள் ஆண்டு
1979- சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம்
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்கு
சட்டப்பிரிவு 21 a வழிவகை செய்கிறது.

*குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986)-இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு
குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

*சிறார் நீதிமன்றம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)-இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல்
இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

* போக்சோ சட்டம், 2012 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக
முக்கியத்துவம் அளிக்கப்ட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

* 1096 குழந்தைகளுக்கான உதவி மைய எண்- இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மணிநேர
கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் மற்ற ஏதேனம்
வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
பெண்கள் உரிமைகள்

*பெண்கள் மற்றும் சிறுமியின் உரிமைகளும் மனித உரிமைகளாகம். பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும்
சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதிசெய்கிறது.

1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான
மசோதாவை ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டது. இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என
அழைக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும்
உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கமான ஒரு தளத்தை உருவாக்கியது.

பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய
நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது.