Unit - 9 இந்தியாவின் ஆரம்ப கால அரசியல் இயக்கங்கள்



இந்தியாவில் கட்சிமுறை

 " ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தினாலும் தேசியவாதத்தின் எழுச்சியினாலும்
இந்தியாவில் கட்சிமுறைகள் வெளிப்பட்டன.

இந்தியாவில் ஆரம்பகால அரசியல் அமைப்புகள்



1. பங்கபஷா பிரகசிகா சபை, 1836
நிறுவனர்: ராஜா ராம் மோகன் ராயுடன் இருந்த ஆதரவாளர்கள்.
கோரிக்கை: உயரிய அரசு பதவிகளுக்கு இந்தியர்களை நியமித்தல், பத்திரிக்கைச் சுதந்திரம்,
ஜமீன்தார்களின் அடக்குமுறையை தடுத்தல்.


2. ஜமீன்தாரிகள் அமைப்பு (வங்காள நில உடைமையாளர்கள் சங்கம்), 1836
நிறுவனர்: பிரசன்னா குமார் தாகூர், துவாரகநாத் தாகூர் மற்றும் இராதா காந்த் தேப்,
நோக்கம்: நில உரிமையாளர்களின் நலன்களை பாதுகாத்தல்.
போராட்டத்தன் முறை: அரசியலமைப்பு முறைகள்.

3. பிரிட்டிஷ் இந்திய சங்கம், 1843
நிறுவனர்: இங்கிலாந்தில் வில்லியம் ஆடம் என்பவரால் நிறுவப்பட்டது.
நோக்கம்: ஆங்கிலேயர்கள் இந்தியர்களை நடத்தும் துறை மற்றும் நிலைமையை இங்கிலாந்து
மக்களுக்கு தெரியப்படுத்துவன் மூலம் இந்தியர்களின் நிலையை மேம்படையச் செய்தல்.
நோக்கத்தை அடைய அவர்கள் அரசியலமைப்பு மற்றும் சட்ட வழிகளை பின்பற்றினர்.

4. பிரிட்டிஷ் இந்திய கழகம், 1851
வங்காள நில உடைமையாளர்கள் சங்கம் மற்றும் பிரிட்டிஷ் இந்திய சங்கம் இணைக்கப்பட்டு
பிரிட்டிஷ் இந்திய கழகம் உருவாக்கப்பட்டது.
கோரிக்கைகள்
• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை அமைத்தல்.
. நீதித்துறையை நிர்வாகத்துறையிலிருந்து பிரித்தல்.
. உப்பு, ஸ்டாம்ப் ஆகியவற்றின் மீதான வரியை விலக்குதல்.
• உயர் பதவிகளில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்தல்.
• விளைவு: சாசனச் சட்டம் 1853- சட்ட நடவடிக்கைகளுக்காக கவர்னர் ஜெனரலின் கவுன்சிலில்
மேலும் 6 பேர் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

5. பம்பாய் கழகம், 1852:
நிறுவனர்: ஜெகன்நாத்சங்கர்ஷேத், சர் ஜாம்ஷெட்ஜி ஜெஜிபாய், நௌரோஜிஃபர்சுங்கி, டாக்டர்.பாவ்
தாஜி லாட், தாதாபாய் நௌரோஜி மற்றும் விநாயகர் சங்கர்ஷேத்.
நோக்கம்: சட்டரீதியான போராட்ட வழிமுறைகள் மூலம் பொது குறைகளை நிவர்த்தி செய்தல்.


6. கிழக்கிந்திய கூட்டமைப்பூ, 1866
நிறுவனர்: தாதாபாய் நௌரோஜி-லண்டன்
நோக்கம்: இந்தியர்களின் நலனை மேம்படுத்த, இங்கிலாந்தின் பொது மக்களிடையே இந்தியர்
களின் கேள்விகளை விவாதித்தல் மற்றும் அவர்களின் ஆதரவை திரட்டுதல்.

7.பூனா சர்வஜானிக் சபை, 1870:
நிறுவனர்: மகாதேவ் கோவிந்த் ரணடே மற்றும் அவரது ஆதரவாளர்களால் புனேவில்
ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கம்: அரசாங்கத்தைபொது மக்களுடன் இணைத்தல். விவசாயிகளின் சட்ட உரிமைகளுக்காக
பணியாற்றுதல்.

8. இந்தியன் லீக், 1875
நிறுவனர்: சிசிர் குமார் கோஷ்-கல்கத்தா
நோக்கம்: சாதாரண மக்களிடையேயும் தேசியவாத உணர்வை ஏற்படுத்துதல்.

9. கல்கத்தாவில் இந்தியர்களுக்கான கூட்டமைப்பு (இந்திய தேசிய கூட்டமைப்பு), 1876
நிறுவனர்: ஆனந்த மோகன் போஸ் மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி.
நோக்கம்: மக்களின் அரசியல், அறிவுசார் மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக சட்ட
முறையிலான வழிமுறையில் வழிமுறைகளை ஊக்குவித்தல். அரசியல் தொடர்பாக மக்களிடையே
கருத்துக்களை உருவாக்குதல். பொது அரசியல் நிகழ்ச்சிகளினால் இந்திய மக்களை ஒன்று திரட்டுதல்.
நிகழ்வுகள்:
இந்த அமைப்பு, இந்திய சிவில் சர்வீஸ் தேர்விற்கான தேர்வர்களின் வயது வரம்பை குறைப்பதை
எதிர்த்து 1877 ல் போராட்டம் நடத்தியது.
*. அடக்குமுறை ஆயுதச்சட்டம் (1878) மற்றும் வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டம் (1878)
ஆகியவற்றிற்கு எதிராக பிரச்சாரங்கள் செய்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் குடிமைப் பணி தேர்வை நடத்தவும், உயர் நிர்வாக
பதவிகளை இந்தியமயமாக்கவும் கோரிக்கை விடுத்தது.

10. பாம்பே பிரசிடென்சி அமைப்பு. 1885
நிறுவனர்: பெரோஷா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி மற்றும் K.T. தெலாங்.
நோக்கம்: இந்த அமைப்பு இல்பர்ட் மசோதா மற்றும் லிட்டனின் பிற்போக்கு கொள்கைகளுக்கு
எதிராக உருவாக்கப்பட்டது.

11. இந்திய தேசிய காங்கிரஸ், 1885
நிறுவனர்: A.0. ஹீயும்.
நோக்கம்: சட்டமன்ற மற்றும் அரசியல் பிரிவுகளில் இந்தியர்களின் அரசியல் பங்கேற்புக்கான
சுதேச அடிப்படை முறை.

12. சுயராஜ்ய கட்சி (ஆரம்பம்-1922-23)
நிறுவனர்: சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு.
இலக்கு: 1923 ல் புதிய சட்டமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுதல். அதிகாரப்பூர்வ
கொள்கையை சீர்குலைத்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தை தடம் புரளச் செய்தல்.

13. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1925
பழமையான கம்யூனிச அரசியல் கட்சி மற்றும் இந்தியாவிலுள்ள எட்டு தேசிய அரசியல் கட்சிகளில்
இதுவும் ஒன்றாகும்.
நிறுவனர்: M.N. ராய், அபானி முகர்ஜி, ஹஸ்ரத் மோகனி.
நோக்கம்: ஏகாதிபத்தியத்தற்கு எதிரான தேசியவாதத்தை சர்வதேசவாதத்துடன் இணைத்தல்.
அமைதி முறையிலான சட்ட மறுப்பு இயக்கத்திற்கு இணையான ஒரு இயக்கத்தை ஏற்படுத்துதல்.

14. காங்கிரஸ் சோஷயலிச கட்சி, 1934
இந்திய தேசிய காங்கிரஸிற்குள்ளேயே காங்கிரஸ் சோஷிலிச கட்சி உருவாக்கப்பட்டது.
நிறுவனர்: J.P. நாராயணன், ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் மினோ மசானி.
நோக்கம்: CSP பரவலாக்கப்பட்ட சோஷியலிசத்தை ஆதரித்தது, இதில் கூட்டுறவு, தொழிற்
சங்கங்கள், சுதந்திரமான விவசாயிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பொருளாதாரத்தில் கணிசமான
பங்கை கொண்டுள்ளனர்.

15. சுதந்திர தொழிலாளர் கட்சி, 1936
நிறுவனர்: B.R. அம்பேத்கர்.
நோக்கம்: இது இந்தியாவில் பிராமணிய மற்றும் முதலாளித்துவ அமைப்புகளை எதிர்த்தது. இந்திய
தொழிலாளர் வர்க்கத்தை ஆதரித்தது மற்றும் சாதி முறையை அகற்ற முயன்றது.

16. பார்வர்டு பிளாக், 1939
நிறுவனர்: சுபாஷ் சந்திர போஸ்.
நோக்கம்: இது ஒருங்கிணைப்பு குழுவை கட்டமைப்பதில் இதன் பங்கு இருந்தது.

 17. புரட்சிகர சோஷயலிச கட்சி, 1940
இது வங்காள தாராளவாத இயக்கம், அனுசீலன் சமிதி மற்றும் ஹிந்துஸ்தான் சோஷியலிச
குடியரசு (HSRA) கட்சியிலிருந்து வேரூன்ற தொடங்கியது.
நோக்கம்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை வன்முறையினால் தூக்கியெறிந்து இந்தியாவில்
சோஷியலிசத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

18. அகில இந்திய பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பு. 1942
நிறுவனர்: 1942 ல் அம்பேத்கரால் ஏற்படுத்தப்பட்டது.
நோக்கம்: தலித் சமூகத்தின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தல். அகில இந்திய பட்டியல்
இனத்தவர் கூட்டமைப்பானது பின்னர் இந்தியக் குடியரசு கட்சியாக உருவெடுத்தது.