Group I II IV செவ்வாய்க்கு தற்போது வரை அனுப்பப்பட்ட விண்கலங்கள்


செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகள் பற்றிய தொகுப்பு

* உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சியில் அதிக திட்டம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய உள்ளன

* இதற்கு காரணம் பூமிக்கு மிக அருகில் உள்ளதாலும் அவற்றில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தாலும் அவற்றில் அதிக ஆய்வு செய்கின்றனர் பூமியை போன்ற அம்சங்களைக் கொண்டது செவ்வாய்

 ரஷ்யா:
‌‌
  *  1960 இல் சோவியத் ரஷ்யா முதன்முதலில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது 

*இருப்பினும் 1964 நவம்பர் 28 அமெரிக்காவின்  மேரினர் 4 வின் களம் தான்  வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் விண்கலம்

 இந்தியா:

* இந்தியா 2013 நவம்பர் 5 இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது 

*குறைந்த செலவில்( 450 கோடி) விண்கலத்தை அனுப்பிய நாடு என்ற பெருமையை பெருமைக்குரியது இந்தியா

 ஐக்கிய அரபு அமீரகம்:


 *அரபு தேசத்தில் முதல் நாடாக செவ்வாய் கடந்த 2020 ஜூலை 20 அல் அமல்( ஹோப்) விண்கலத்தை அனுப்பி வரலாறு படைத்தது 2021 பிப்ரவரி செவ்வாய் கிரகத்தை அடையும் இந்த விண்கலம் ஜப்பான் தானே கசிமா தீவிலிருந்து ராக்கெட் மூலம் ஏவப்பட்டது

 சீனா:

 *சீனாவின் முதல் செவ்வாய் கிரக திட்டம் தியான்வென்-1 அர்த்தம் சொர்க்கத்துகான கோவில்கள் என்ற பொருள் கொண்ட இந்த விண்கலம் 2020 ஜூலை 23 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

* தலா ஒரு ஆர்பிட்டர் லேண்டர் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த வின்கலம் 2021 பிப்ரவரி செவ்வாய் கிரகத்தை சென்றடையும் இது செவ்வாய் மண்ணின் தடிமன் மற்றும் துணை அடுக்குகள் குறித்தும் ஆராயும்

*ஐ‌.ஆ.எ அரபு விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்காமல் அல் அமல் மின்கலத்தின் ஆர்பிட்டர் செவ்வாயின்  வளிமண்டலத்தை ஆண்டு முழுதும் ஆராயும்

 அமெரிக்கா:

* அடுத்ததாக அமெரிக்கா தனது பெர்செவர் அன்ஸ் மின்கலத்தை 2020 ஜூலை 30 அனுப்ப திட்டமிட்டுள்ளது

* இது ஆர்பிட்டர் லேண்ட் ரோவர் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த விண்கலம் செவ்வாயில் கடந்த காலங்களில் உயிர்கள்  வாழ்வதற்கான சூழல் இருந்ததா என்பதை ஆராய்வதுடன் நுண்ணுயிரிகள் வாழ்ந்தன வா என்ற ஆய்வை மேற்கொள்ள உள்ளது

* இதில் சிறப்பம்சமாக 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டரும் பொருத்தப்பட்டுள்ளது மின்கலத்தின் லேண்டர் தரையிறங்கியதும் அதன் அடிப்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் வெளியே வந்து பறந்து ஆய்வு செய்யும்

* வேற்று கிரகத்தில் பறக்கக்கூடிய முதல் ஹெலிகாப்டர் என்கிற பெருமையும் பெற போகிறது

 ஜப்பான்:

* ஜப்பான் 2024 ஆம் ஆண்டு விண்கலத்தை அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது

 செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகள்

1. ரஷ்யா
2. அமெரிக்கா 
3. ஐரோப்பிய யூனியன் 
4. இந்தியா 
5. ஐக்கிய அரபு அமீரகம்
6. சீனா