லோக்பால்- தேர்விற்கான முக்கிய குறிப்புகள் polity important topic notes





1.லோக்பால் என்பது: ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்


2 .லோக்பால் லோகோவை வடிவமைத்தவர் பிரசாத் மிஸ்ரா , உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்

3 .லோக் பால்' என்னும் சொல்? மக்கள் வீரர், மக்களை காப்பவன்

4 . லோக்ஆயுக்தா ? மக்கள் விழிப்பாளர்

5 ஏழாவது முறையாக லோக்பால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் வாஜ்பாய்

6 லோக் பால்' என்னும் சொல் யாரால் அறிமுகம் செய்யப்பட்டது?லஷ்மி மால் சிங்வி 1963

7 லோக்' என்றால் மக்கள் என்றும் 'பால்' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும்
சமஸ்கிருதம் அர்த்தமாகும்

8 லோக் ஆயுக்தா தலைவர் பதவி காலம் 70 வயது அல்லது ஐந்து ஆண்டுகள்

9லோக்பால் மசோதா மக்களவையில் முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 1968 ஆம் ஆண்டு (இந்திரா காந்தி அரசு)

10 லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கபட வேண்டும் என்று கூறிய குழு
மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் (ARC) 1966 ல் தன்

11லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை

✏️பிரதமர்

 ✏️மக்களவைத்தலைவர்,

✏️மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

✏️இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை

✏️நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி

✏️குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர்

 12 லோக்பால் மக்களவையில் நிறைவேறிய ஆண்டு ? 18 டிசம்பர் 2013 ல்

13 லோக்பால் மாநிலங்கள் அவையில் எப்போது நிறைவேறிய ஆண்டு? டிசம்பர் 17 2013

14லோக்பால் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்பவர்? குடியரசுத் தலைவர்

15லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் முதன் முதலில் யாரல் அறிமுகப்படுத்தப்பட்டது? சாந்தி பூஷன் (1968, மே)116.

16 எந்த மசோதா அடிப்படையில் தற்போது லோக்பால் சட்டம் மாற்றப்பட்டது இல்,மன்மோகன் சிங் அரசால் தாக்கல் செய்த மசோதா அடிப்படையில்

17 லோக்பாலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் எப்போது அளித்தார் ? 2014 ஜனவரி 1

18 லோக்பால் நடைமுறைக்கு வந்த வருடம்? 2014 ஜனவரி 16

19 லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்- 2013

20 லோக்பாலுக்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி? பிரணாப் முகர்ஜி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி)

21 லோக்பால் (OMBUDSMAN) எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? ஸ்விடன் (1809)

22 ombudsman என்ற பெயரை லோக்பால் என்று மாற்றியவர்? லஷ்மி மால் சிங்வி

23 லோக்பால் - ஊழலுக்கு எதிராக தேசிய அளவில் அமைப்பு

24 லோக் ஆயுக்தா - ஊழலுக்கு எதிராக மாநில அளவில் அமைப்பு

25 லோக் ஆயுக்தா முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம்? மகாராஷ்டிரா (1971)

26 லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டம் இயற்றிய முதல் மாநிலம்? ஒடிசா

27 நாட்டின் முதல் லோக்பால் தலைவராக பதவியேற்றவர்? பினாகி சந்திரகோஷ்

28 லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது

29 லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்? 1+8

30 லோக்பால் தலைவருக்கு உதியம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்

31லோக்பால் உறுப்பினருக்கு ஊதியம் ? உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்

32 லோக்பால் நியமன விதிகள்

*லோக்பால் அமைப்பின் தலைவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்

*லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறும். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

* மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்